Friday, October 13, 2023

 

எல்லா பெருமையும் எமனுக்கே

 நம் அனைவரின்  வாழ்க்கையும்  எமன் கையில். ஆம்  நம் வாழ்க்கை மரணத்தை மையமாக கொண்டு இயங்குகிறதது. மரணம்  மட்டும் இல்லையெனில் வாழ்க்கை சவ்வாய் இழுத்து சலித்து போகும். இலக்குகள் இல்லாமல் சுறுசுறுப்பற்று போகும். கால பிடிக்குள் கட்டுண்டு கிடக்கும் நாம் பிரமாண்டமாய் வாழ பழக வேண்டும். எமன் எந்த நொடியில் வந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் ஏற்று கொண்டு வாழ்ந்த திருப்தியோடு yes சொல்ல வேண்டும்.

Thursday, April 10, 2014

தேவதை பெண் அவள் ......

ஓ தேவதை திருமகளே ......


உன்னை பார்த்ததும்
கண்ணில் உதித்த மின்னல்
உடலெங்கும் பரவி உயிருக்குள் பாயுதடி

சுதந்திர காற்றை விட
 உன் சுவாச காற்றே
 எனக்கு சொர்கமடி 

உயிர் போகும் தருவாயில்
 உன்னை பார்த்தால் போதும் 
மரணம் கூட எனக்கு மயிர் பீலியடி

முற்பிறவி பயன் தானோ
 உன்னை நன் கண்டு கொண்டேன்

என்ன தவம் செய்தேனோ
 உன் அழகை பார்பதற்கு 

உன்னை பார்த்த என் கண்கள்
 உறங்குவது எந்நாளோ

உன்னை பார்த்த நான்தான்
 உண்மையான பாக்கியவான்
 
என் உடம்பில் கண்கள் தான்
 கொடுத்து வைத்த நல் அவயம்



Friday, February 7, 2014

இந்தியா என்றொரு நாடுண்டு .....

இந்தியா ஒரு இனப்பெருக்க நாடு
இதில் இந்தியர்கள் திறம் வாய்ந்த இயந்திரங்கள் 
இங்கு ஜனநாயகம் என்ற பெயரில் ஆங்கிலேயனின் அடக்கு முறை
இங்கோ தனி மனித போராட்டம் எல்லாம் தற்கொலைக்கு சமம்
நீதிக்கி பின் நின்றால் அவன் தீவிரவாதி அல்லது சமூக விரோதி 
தனி மனித சுதந்திரத்தை சுரண்டி விட்டு ஏனோ -இந்தியா
மட்டும் வல்லரசாக வேண்டும் என்ற இருமாப்பில்




Wednesday, January 22, 2014

பாட்டுகள் பல விதம்

பாட்டு பாடினாள்  பாட்டி --அசந்து
தூங்கினான் பேரன்

பாட்டு  பாடினார் பாகவதர்--சேர்ந்து
தூங்கியது கலை கூடம்

பாட்டு  பாடினார் போதகர் --அதிர்ந்து
குலிங்கியது தேவாலயம்

பாட்டு பாடினான் விவசாயி --கதிர்
உடைத்து வந்தது நெற்  பயிர்

பாட்டு பாடினார் குர் நாதர் --பார்
எங்கும் பரவியது ஆனந்தம்

சோகங்களை தாண்டி

கவலைகளுக்கு விலை கொடுங்கள்
அவை சந்தோசத்தின் சாவிகள்

சவால்களை சந்தியுங்கள்
அவை சரித்திரத்தின் திறவு கோல்

ஏமாற்றங்களை எதிர் கொள்ளுங்கள்
அவை மாற்றத்தின் மகா மந்திரம்

போட்டி போடா புறபடுங்கள்
அவை வாய்புகளின் வர பிரசாதம்

முயற்சிகளை முதன்மை படுத்துங்கள்
அவை வெற்றியின் சிதம்பர ரகசியம்

கன்னியாஸ்திரிகள்

கன்னியாஸ்திரிகள்
விதவை வடிவில்
தேவதைகள் ...

காதலித்து பாருங்கள்

காதலித்து பாருங்கள்
பூமி புதிதாய் தெரியும்

காதலித்து பாருங்கள்
உயிர் ஒரு விதமாய் கருவுருக்கும்

காதலித்து பாருங்கள்
கனவுகள் பல பல கருத்தரிக்கும்

காதலித்து பாருங்கள்
சோம்பலான ஒரு சுகம் பிறகும்


காதலித்து பாருங்கள்
உடைகளுக்கு உரிய உயிர் கிடைக்கும்


காதலித்து பாருங்கள்
ஈரடி நடை ஓரடி ஆகும்


காதலித்து பாருங்கள்
உடம்பில் இதயத்தின் இயக்கம் புரியும்


காதலித்து பாருங்கள்
தனிமையில் இருமை இருப்ப்து தெரியும்

காதலித்து பாருங்கள்
மனம் கற்பனை முன்னே கரைந்து போகும்


காதலித்து பாருங்கள்
அமைதிக்கு என்ன அர்த்தம் என்பது புரியும்

காதலித்து பாருங்கள்
புவியீர்பிசை பொய்த்து போவது தெரியும்



காதலித்து பாருங்கள்
நெஞ்சம் நிரம்பி நிம்மதி முகத்தில் ஊற்றெடுக்கும்


காதலித்து பாருங்கள்

தலையணைக்கு தக்க துணை கிடைக்கும்


காதலித்து பாருங்கள்
நாளும் நண்பர்களின் நசெரிப்பு புரியும்


காதலித்து பாருங்கள்
காலை நேரங்களில் நல்ல உறக்கம் வரும்

காதலித்துதான்  பாருங்கள்
காதலில்
தோற்றால் ஜெயிப்பதற்கு அது பாடம்
ஜெயித்தால் வரும் காதலர்களுக்கு அது வேதம் .